மாண்புமிகு விவசாயிகள்
மாண்புமிகு விவசாயிகள் அனைவர்க்கும் எனது விவசாய தின வாழ்த்துக்கள். இன்றைய தினத்தில் விவசாயிகளையும் அவர்களின் நிலைமையை பற்றியும் அறிவது நமது கடமை. கடந்த சில மாதங்களில் நடைபெற்ற பெரியம்மா சின்னமா விளையாட்டில் நிலவிய ஒரு அசாதாரண சூழ்நிலைக்கிடையில் இந்த இரண்டு மாதத்தில் மட்டும் தமிழகத்தில் காவிரியில் தண்ணீர் வரததால் தங்களின் பயிர்கள் கருகியதை கண்டு இதுவரை 32 விவசாயிகள் மடிந்துள்ளனர். ஆனால் அது மிகைப்படுத்த படவில்லை.
விவசாயமும் அதை சார்ந்த நாடான நம் நாட்டில் விவசாயிகளுக்கான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா என்றால் ஒரு பெரிய கேள்விகுறிதான்.
இன்றைய நிலையில், நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு மணிநேரமும் கிட்டத்தட்ட 80 விவசாயிகள் வேறு தொழிலுக்கு மாறுகின்றனர். இந்தியாவில் மஹாராஷ்டிராவில் கடந்த 2015 வருடத்தில் மட்டும் 3228 விவசாயிகளும் நாடுதழுவிய அளவில் 10000க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். காரணம் கடன் தொல்லை மற்றும் பாசன வசதி இல்லாமை போதிய விலை இல்லாமை.
பெட்ரோல், டீசல் விலையை நீயே நிர்ணயித்துகொள் என தனியாரிடம் கொடுக்கும் அரசாங்கம், உரத்தின் விலையை நீயே நிரணயித்துகொள் என தனியாரிடம் கூறும் அரசாங்கம், வீட்டில் வேலை செய்யும் பணியாளருக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும் அரசாங்கம் ஏன் அனைத்து விவசாய பொருட்களுக்கும் கொஞ்ச லாபம் தரும் அளவுக்காவது குறைந்தபட்ச விலை நிர்ணயிக்க முடியவில்லை.
இந்தியாவில் 70 % மக்கள் இன்னும் கிராமபுறங்களில் தான் வசிக்கின்றனர் அவர்களின் பெரும்பாலானோரின் வாழ்வாதாரமே விவசாயம் தான். அது ஒரு தொழில் மட்டுமல்ல அது அவர்களின் வாழ்க்கை முறை. ஆனால் தனியார்மாயம், தாராளமயம் என அக்கறை காட்டும் அரசாங்கம் ஏனோ விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கண்டுகொள்வதில்லை.
1947ல் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு 51%. ஆனால் தற்போது அதன் பங்களிப்பு 14 சதவீதமாக குறைந்துவிட்டது. கடந்த 25 ஆண்டுகளில் மட்டும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் ஆனால் அதை இன்றளவும் ஒரு பொருட்டாவே அரசாங்கம் கருதுவதில்லை.
"திடீரென உயர்ந்த சின்னம்மாவின் மதிப்பை போல்
விவசாயிகளின் மதிப்பும் ஒருநாள் மாறும் "
