விவசாயின் குரல்
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சாவூரைய்யா
மாதத்திற்குள் மடிந்து போனோம் நூறு பேரய்யா
சாதி மத பேதமின்றி சோறு போட்டோம்யா - சாவ
நாடும் எங்கநிலைமையாத கொஞ்சம்பாருய்யா
பிள்ளைகளுக்கு பால் வாங்ககூட காசில்லையே
பால்காரனிடம் கடஞ்சொன்னேன் வழியுமில்லயே
பத்துநாளா மூத்தவன் கல்லூரிக்கு போலயே
கட்டணம்செலுத்தத்தான் கையிலு ஒண்ணுமில்லயே
என் இளைய பிள்ளை படிக்கிற பால்வயசுல
நிலமை அறிஞ்சு கூலி வேலைக்கு போகுதே
என்வீட்டு கண்ணாடி என்பொழப்ப பாத்து
கைதட்டி ஏளனமாய் சிரிக்குதே சிரிக்குதே !!
என் வீட்டு காளை கூட கண்ணீர் சிந்துதே
நான்படும் பாட்டதா அதுவும் பாக்குதே
அடேய் ! என்ன வித்தாவது உன்குடும்பத்த
பாத்துக்கோ என சொல்லாம சொல்லுதே
நாளசோத்துக்கு நாலாப்புறம் தேடி ஓடுறேன்
நாளைக்காவது என் புள்ளைகளுக்கு கறிகுழம்பு
சோறுபோட முடியாதாயென ஏங்கி சாகுறேன்
காலையில கடன்காரனா கண்முழிக்கிறேன்
இருந்தும்கூட காட்ட பாத்து கவல மறக்கிறேன்
இன்னைக்குகூட எந்நிலம மாறாதாயென
ஏக்கத்தோடு ஏறுப்பூட்ட புறப்பட்டுடேன்
வேறதொழில் பாத்துகோடா தம்பின்னு
புள்ளகிட்ட கண்டிச்சு சொல்லிப்புட்டேன்...