Wednesday, 8 March 2017

                              மகளிர் தின வாழ்த்து 


   இந்தியா 104 செயற்கைக்கோளை ஒரே ராக்கெட்டில் ஏவியதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன் என டொனால்ட் டிரம்பின் உளவுத்துறை தலைவர் டான் கோட்ஸ் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் தெரிவித்து, இந்தியா நம்மை காட்டிலும் விண்வெளித்துறையில் முன்னேற்றம் கொண்டுள்ளதை நாம் மறுக்கமுடியாது என கூறும் அளவுக்கு இன்று நம் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளோம்.  ஆனால் நாம் சமுதாயத்தில் பல்வேறு கட்டமைப்புகளை கொண்டுள்ளோம் அதில்  பெண்களுக்கென ஒரு விதி ஆண்களுக்கான ஒரு விதி என எழுதப்படாத ஒரு வரையறையை கொண்டுள்ளோம்.

     அவ்விதியை தகர்த்தெறிந்ததில் பெரியார் மற்றும் அண்ணாவின் கருத்துக்கள் மிக முக்கியமானவை. விதவை மறுமணம், பெண்களுக்கு சொத்துரிமை, பெண் சுதந்திரம், பெண்கல்வி  போன்ற  பல்வேறு சமுதாய புரட்சியின் விளைவு  இன்று குறிப்பாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 % இட ஒதுக்கீடு வழங்கும் அளவுக்கு உயர்ந்துள்ளது. 

 குடியரசு தலைவராக பிரதீபா பாட்டிலும், பிரதமராக இந்திராகாந்தியும் அமர்ந்து  அந்நாற்காலி தன்னை அலங்கரித்து கொண்டது. சமீபகாலமா ஆண் பெண் என்ற வேறுபாடின்றி சமுதாயம் ஒரே நேர்கோட்டில் பயணிக்க தொடங்கியிருக்கிறது என்றால்  உலகமயமாதலும் , பெண்களின் கல்வியறிவும் ஒரு காரணம். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு கடுமையான தண்டனைகள் அளிக்கப் பட  வேண்டும் இன்னும் நாம் பெண்களுக்கான உரிமையை நிலைநாட்டிட வேண்டுமென்பதில் மாற்றுக்கருத்தில்லை.

  நடிகை பாவனாவுக்கு பாவாடை கிழிந்ததால் பாராளுமன்றம் வரைக்கும் எதிரொலிக்கும் அதே குரல் நந்தினி போன்ற பாமர பெண்ணிற்கும் ஒலிக்கவேண்டும். பெண்ணை ஒரு காம பொருளாய் மட்டும் பார்க்கும் சில குரூர எண்ணம் நம்மிடத்தில் ஒழிய வேண்டும். அவளுக்கான உரிமையை நாம் வழங்கிட வேண்டும். அவ்வப்போது அவள் உடலால் உணருகிற வலியை ஆண்கள் அறிந்திருக்க வேண்டும்.  ஆண் , பெண் என்ற வேற்றுமை இல்லாமல் இருத்திடல் வேண்டும். தாய், சகோதரி, தோழி என பல்வேறு உறவுகளில் நம்மை சுற்றி பிணைந்துள்ள பெண்ணை போற்றி பாதுகாத்திட  வேண்டும். 

"மனைவி  கணவனை அடிப்பதில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது என சமீபத்தில் அறிக்கை ஒன்று வெளியானதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன் "  

No comments:

Post a Comment