Tuesday, 20 September 2016

                                                 அடப்பாவிங்களா       


         சுதந்திர போராட்டத்தில் பங்குகொண்டதோ சூப்பர்ஸ்டார் குடும்பம் இல்லை அவசர நிலை காலகட்டத்தில் அரசுக்கு எதிராக போராடிய அரிய குடும்பமோ என்னவோ அந்நாரின் மூத்தமகளுக்கு ஐ.நா வின் பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெண்கள் வளர்ச்சிக்கான இந்திய தூதராகவும், இளைய மகளுக்கு விலங்குகள் நலவாரிய மற்றும் விலங்குகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் தூதராகவும் நியமித்து கௌரப்படுத்தப்பட்டுள்ளனர்.

              மீதமுள்ள அவரின் மனைவிக்கு ஆளுநர் பதவியும் ஐயாவுக்கு குடியரசு தலைவர் பதவியும் வழங்கி கௌரவப்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும். ( லதா ரஜினிகாந்த்திற்கு ஆளுநர் பதவி வழங்க மறைமுகமாக பேச்சுவார்த்தை நடைபெற்று பிறகு ரஜினியின் தலையீட்டால் தோல்வியுற்றது என்ற செய்தியும் வெளிவந்தது).

      நேதாஜியோடு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தனது கணவரின் இறப்பிற்கு பிறகு தியாகிக்கான பென்சின் பணம் நிறுத்தப்பட்டுள்ளது. மிகவும்ஏழ்மை நிலையில் இருப்பதால் அதை மறுபடியும் வழங்குமாறு அவரது மனைவி தள்ளாடும் வயதிலும் ஆறு ஆண்டுகளாக போராடுகிறார்.

        நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தர்மலிங்கம் பிள்ளை என்ற தியாகி வசதியான குடும்பத்தில்பிறந்து சுதந்திர போராட்டத்தில் தனது சொத்தை இழந்தார்.அவரின் இருமகள்களும் இன்றுகூலி வேலை பார்த்து நாற்பது வயது கடந்தும் திருமணமாகாமல் வறுமையில் வாடுகின்றனர். கப்பலோட்டிய தமிழனின் பேரனோ கட்டட வேலை பார்க்கிறார்.

                        யார் கௌரவிக்கவேண்டியவர்கள் ????????????????

                     " அடிமைநீங்க போராடினோர் ஒருநாள்  எச்சம்
                        ஏழ்மையில் வாடினர்  இந்நாள் "

Monday, 12 September 2016

     சாதிக்குள்ளே  சாதி

Image result for periyar photos

சுயமரியாதை இயக்கம் கண்ட மண்ணாம் - தமிழகம்  
பகுத்தறிவு பதிந்த பகலவன் பிறந்த நாடாம் - தமிழ்நாடு 
இன்று சாதிச்சண்டை போடுவதிலே இரண்டாமிடமாம் - இந்தியாவிலேயே பெரியார் , அண்ணா பிறந்த தேசமாம் அங்கே !!!!!
எம்மக்களிடம் இருந்த நேசம் தான் எங்கே ???????????

ஊரெல்லாம் வீதியாம்  , வீதியெல்லாம் சாதியாம்  
சாதிக்குள்ளே சாதியாம் , அச்சாதிக்குள்ளயே எல்லாமாம் 
தமிழுக்கு சங்கம் வைத்து வளர்த்தவன்  இன்று - சாதிக்கு 
சங்கம் வைத்து போற்றுகிறானே - சாதிகள் இல்லையடி பாப்பா என்று  சொன்ன பாரதியை எங்கள் சாதிக்காரன் என்கிறானே !!!!!

பெண்ணை போற்றி வளர்த்த திருநாடாம் அன்று 
காதலிக்கவில்லயென வெட்டிக்கொள்ளும் ஆணவநாடாம் இன்று 
இறந்தவளை பெண்ணென எவரும் பார்க்கவில்லயே - ஆனால் 
அவள் என்ன சாதி என வினவ மறக்கவில்லயே !!!!!

சாதியால் சத்துணவும் இல்லை , மதத்தால் மதியவுணவும் இல்லை 
இரண்டால் இரவுணவும் இல்லை, உழைப்பில்லையேல்  உயர்வில்லை ஏனோ பலரின் மனமோ இதை ஏற்பதில்லை !!!!!!!!!!