கேட்டது நிவாரணம் கிடைத்தது நிர்வாணம்
நிவாரணம் கேட்டு
நிதானம் காத்து
நித்தமும் குலைந்து
நித்திரை தொலைத்தோம்
வறண்டுபோன பூமியில்
வாழ்வாதாரம் போச்சு
வாழ்வளித்த நிலமெல்லாம்
வட்டிக்காரனுக்கு சொந்தமாச்சு
விளைந்தபொருளெல்லாம்
விலையேற்றமின்றி
விலைநிலமெல்லாம்
வியாபாரமா போச்சு
விவசாயி வீழ்ந்தாலும்
விவசாயம் வீழலாமா ?
விவசாயக்கடன் தள்ளுபடி
விரயமென சொல்லலாமா !
மாநிலத்திடம் மன்றாடியும்
மத்தியத்திடம் மானமிழந்தும்
மதிப்பில்லையே இனி என்ன செய்ய?
