எளிமையும் எதார்த்தமும்
டிசம்பர் 5 , தான் முதலமைச்சராக பதிவியேற்ற பிறகு எழுந்த மிகப்பெரிய சவாலான பிரச்னையாக ஜல்லிக்கட்டு இருந்தது. இத்தனை வருடமாக ஜெயலலிதாவால் சாதிக்க முடியாததை ஒரு சில நாட்களிலியே செய்து காட்டினார் தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் மதிப்பிற்குரிய பன்னிர்செல்வம் அவர்கள். இதற்கு இளைஞர்களின் தன்னெழுச்சி முக்கிய காரணம் என்று நாம் சொன்னாலும் இதற்கு முன்னாள் இருந்த முதல்வர், சட்டம் உட்பட எல்லா பிரிவுகளிலும் ஆற்றல் உடைய புரட்சியின் தலைவி என நாம் சிலாகித்துக்கொள்ளும் ஜெயலலிதா இந்த புரட்சியை நடத்த அனுமதித்திருப்பாரா என்றால் ஒரு மிகப்பெரிய கேள்விக்குறிதான். ஜல்லிக்கட்டுக்கு இது போன்ற ஒரு வலுவான சட்டத்தை கொண்டு வந்துருப்பாரா என்றால் நம்மில் பலபேர் சற்றே சிந்திக்கதான் செய்வோம் அதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளே சான்று.
ஓ பி எஸ்தன்னால் சுதந்திரமாக ஒரு முடிவை எடுக்க முடியாத ஒரு சூழ்நிலையிலும்கூட இக்குறுகிய காலகட்டத்திற்குள் சில ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு தன் ஆளுமையை முடிந்த அளவுக்கு சிறப்பாக வெளிப்படுத்தினார் என்றால் மறுக்கமுடியாது. பல்வேறு பொது நிகழ்ச்சியில் மக்களோடு மக்களாக ஒரு முதல்வர் என்ற மிதப்பில் இல்லாமல் தனக்கே உரித்தான தோற்றத்திலும் செயலலிலும் காணப்பட்டார். மக்களுக்கும் முதல்வருக்குமான ஒரு இடைவெளி மிகவும் குறைந்தே இருந்தது. ஜல்லிக்கட்டிற்காக ஒரு நிரந்திர தீர்வை கொண்டுவந்து மக்களின் பார்வையில் இருந்த ஓ பி எஸ் ன் பிம்பத்தை மாற்றி காட்டவும் செய்தார். சென்னையில் குடிதண்ணீர் பற்றாக்குறைக்காக ஆந்திரா சென்று தண்ணீர் பெற்று தரவும் செய்தார். கிராமபுறத்து மாணவர்களின் நலனுக்காக மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வை தமிழ்நாட்டிற்கு மட்டும் விலக்கு அளிக்கக்கூடிய வகையில் ஒரு சட்ட மசோதாவையும் கொண்டுவந்து சட்ட மன்றத்தில் நிறைவேற்றவும் செய்தார். இவ்வளவும் ஒரு அதிகார வெறிபுடித்த புலியின் கூட்டுக்குள் இருந்த பூனையாக செய்து காட்டினார்.
பத்திரிகையாளர் ஒருமுறை தங்களை சுதந்திரமாக நடக்க ஏதோ ஒரு சக்தி தடுக்கிறதே என்ற கேள்விக்கு , அந்த சக்தி எது என்று உங்களுக்கே தெரியும் என்று மறைமுகமாக தன் நிலைமையை கூட வெளிப்படுத்தினார். தற்போது தனது சொந்த காரணத்திற்காக பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது நமக்கு பெரிய விசயமாக இருந்தாலும், அவருக்கு தன் பதவி நிரந்திரமில்லை என்பது அவரே அறிந்ததுதான். ஏதோ பல வருடங்களுக்கு பிறகு ஒரு எளிமையான முதல்வரை காணமுடிந்தது.
என்னதான் சட்டத்தில் இதற்கு இடம் இருந்தாலும் ஒரு வார்டு கவுன்சிலராக கூட மக்களிடம் வாக்கு பெற்றிடாத , மக்களுக்கு அறிந்த முகமும்கூட இல்லாத சசிகலா, முதல்வரின் தோழியென்ற ஒரு காரணத்தினால் மட்டும் அனைத்து தமிழ் மக்களையும் முட்டாளாக்கி முதல்வராக பதவியேற்க உள்ளார். பதவி ஏற்றாலும் அடுத்த ஆறு மாதத்திற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் இந்த தமிழ்மக்களிடம் வாக்கு வாங்கி வெற்றி பெற்றே ஆக வேண்டும். இடைத்தேர்தலில் ஆளும் கட்சிதான் வெல்லும் என்ற எழுதபடாத ஒரு விதி நம் ஊரில் உள்ளது. காத்திருப்போம் விதியை வெல்வார்களா தமிழர்கள் என்று ???
" அரசியலெல்லாம் அருவறுப்படி
அறமெல்லாம் அங்கே இல்லையடி
தமிழ்நாட்டுஆட்சியெல்லாம் போலியடி
தமிழனுக்கெல்லாம் தலைகுனிவடி
தரம்கெடஆரம்பிக்கிறதோ தமிழ்குடி"
