Friday, 23 December 2016


                                மாண்புமிகு விவசாயிகள் 




    மாண்புமிகு விவசாயிகள் அனைவர்க்கும் எனது விவசாய தின வாழ்த்துக்கள். இன்றைய தினத்தில் விவசாயிகளையும் அவர்களின் நிலைமையை பற்றியும் அறிவது நமது கடமை. கடந்த சில மாதங்களில் நடைபெற்ற பெரியம்மா சின்னமா விளையாட்டில் நிலவிய ஒரு அசாதாரண சூழ்நிலைக்கிடையில் இந்த இரண்டு மாதத்தில் மட்டும் தமிழகத்தில் காவிரியில் தண்ணீர் வரததால் தங்களின் பயிர்கள் கருகியதை கண்டு  இதுவரை 32 விவசாயிகள் மடிந்துள்ளனர். ஆனால் அது மிகைப்படுத்த படவில்லை.

         விவசாயமும் அதை சார்ந்த நாடான நம் நாட்டில் விவசாயிகளுக்கான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா என்றால் ஒரு பெரிய கேள்விகுறிதான்.
இன்றைய நிலையில், நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு மணிநேரமும் கிட்டத்தட்ட 80 விவசாயிகள் வேறு தொழிலுக்கு மாறுகின்றனர். இந்தியாவில் மஹாராஷ்டிராவில் கடந்த 2015 வருடத்தில் மட்டும் 3228 விவசாயிகளும் நாடுதழுவிய அளவில் 10000க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். காரணம் கடன் தொல்லை மற்றும் பாசன வசதி இல்லாமை போதிய விலை இல்லாமை.

       பெட்ரோல், டீசல் விலையை நீயே நிர்ணயித்துகொள் என தனியாரிடம் கொடுக்கும் அரசாங்கம், உரத்தின் விலையை நீயே நிரணயித்துகொள் என தனியாரிடம் கூறும் அரசாங்கம், வீட்டில் வேலை செய்யும் பணியாளருக்கு  குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும் அரசாங்கம் ஏன் அனைத்து விவசாய பொருட்களுக்கும் கொஞ்ச லாபம் தரும் அளவுக்காவது குறைந்தபட்ச விலை நிர்ணயிக்க முடியவில்லை. 

         இந்தியாவில் 70 % மக்கள் இன்னும் கிராமபுறங்களில் தான் வசிக்கின்றனர் அவர்களின் பெரும்பாலானோரின் வாழ்வாதாரமே விவசாயம் தான். அது ஒரு தொழில் மட்டுமல்ல அது அவர்களின் வாழ்க்கை முறை. ஆனால் தனியார்மாயம், தாராளமயம் என அக்கறை காட்டும் அரசாங்கம் ஏனோ விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கண்டுகொள்வதில்லை. 

      1947ல் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு 51%. ஆனால் தற்போது அதன் பங்களிப்பு 14 சதவீதமாக குறைந்துவிட்டது. கடந்த 25 ஆண்டுகளில் மட்டும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் ஆனால் அதை இன்றளவும் ஒரு பொருட்டாவே அரசாங்கம் கருதுவதில்லை. 

    
                    "திடீரென உயர்ந்த சின்னம்மாவின் மதிப்பை போல் 
                     விவசாயிகளின் மதிப்பும் ஒருநாள் மாறும் "

Saturday, 26 November 2016



பிடல் காஸ்ட்ரோ என்ற ஒரு பெயர் அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு சிம்மசொப்பனமாக விளங்கியது என்றால் மிகையாகாது.

1959 ல் கியூபாவில் அதிகாரத்தை எடுத்து
அடிமை தளத்தை விளக்கினாய்
கம்யூனிசத்தை கையில் எடுத்து
பொதுவுடைமையை போதித்தாய்

ஏகாதிபத்தியத்தின் சொத்துகளையெல்லாம்
அரசுடைமை ஆக்கினாய் - தான்
ஏற்று கொண்ட கொள்கையெல்லாம்
ஒன்றொன்றாய் செய்து காட்டினாய்

சுயமரியாதையும் , சமதர்மத்தையும்
மக்களின் மத்தியில் விதைத்தாய் - நீ
638 முறை அமெரிக்காவின் கொலை
வெறியிலிருந்து  உயிர் பிழைத்தாய்

சே குவரே துணைகொண்டு நாட்டை
செல்வச்செழிப்பாய் மாற்றினாய் - உன்
தாடியையும், சுருட்டையும் கொண்டே 
உலக மக்களையெல்லாம் வசீகரித்தாய்

புரட்சியாளனாய் உலகத்திற்கு தெரிகிறாய்  
இன்று இயற்கையின் விருப்பத்தினால்
மண்ணுலகை விட்டே பிரிகிறாய்....!!!!!!!!!


"தடம் பார்த்து நடப்பவன் மனிதன்
தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்  "
                                               - பிடல் காஸ்ட்ரோ




Tuesday, 20 September 2016

                                                 அடப்பாவிங்களா       


         சுதந்திர போராட்டத்தில் பங்குகொண்டதோ சூப்பர்ஸ்டார் குடும்பம் இல்லை அவசர நிலை காலகட்டத்தில் அரசுக்கு எதிராக போராடிய அரிய குடும்பமோ என்னவோ அந்நாரின் மூத்தமகளுக்கு ஐ.நா வின் பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெண்கள் வளர்ச்சிக்கான இந்திய தூதராகவும், இளைய மகளுக்கு விலங்குகள் நலவாரிய மற்றும் விலங்குகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் தூதராகவும் நியமித்து கௌரப்படுத்தப்பட்டுள்ளனர்.

              மீதமுள்ள அவரின் மனைவிக்கு ஆளுநர் பதவியும் ஐயாவுக்கு குடியரசு தலைவர் பதவியும் வழங்கி கௌரவப்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும். ( லதா ரஜினிகாந்த்திற்கு ஆளுநர் பதவி வழங்க மறைமுகமாக பேச்சுவார்த்தை நடைபெற்று பிறகு ரஜினியின் தலையீட்டால் தோல்வியுற்றது என்ற செய்தியும் வெளிவந்தது).

      நேதாஜியோடு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தனது கணவரின் இறப்பிற்கு பிறகு தியாகிக்கான பென்சின் பணம் நிறுத்தப்பட்டுள்ளது. மிகவும்ஏழ்மை நிலையில் இருப்பதால் அதை மறுபடியும் வழங்குமாறு அவரது மனைவி தள்ளாடும் வயதிலும் ஆறு ஆண்டுகளாக போராடுகிறார்.

        நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தர்மலிங்கம் பிள்ளை என்ற தியாகி வசதியான குடும்பத்தில்பிறந்து சுதந்திர போராட்டத்தில் தனது சொத்தை இழந்தார்.அவரின் இருமகள்களும் இன்றுகூலி வேலை பார்த்து நாற்பது வயது கடந்தும் திருமணமாகாமல் வறுமையில் வாடுகின்றனர். கப்பலோட்டிய தமிழனின் பேரனோ கட்டட வேலை பார்க்கிறார்.

                        யார் கௌரவிக்கவேண்டியவர்கள் ????????????????

                     " அடிமைநீங்க போராடினோர் ஒருநாள்  எச்சம்
                        ஏழ்மையில் வாடினர்  இந்நாள் "

Monday, 12 September 2016

     சாதிக்குள்ளே  சாதி

Image result for periyar photos

சுயமரியாதை இயக்கம் கண்ட மண்ணாம் - தமிழகம்  
பகுத்தறிவு பதிந்த பகலவன் பிறந்த நாடாம் - தமிழ்நாடு 
இன்று சாதிச்சண்டை போடுவதிலே இரண்டாமிடமாம் - இந்தியாவிலேயே பெரியார் , அண்ணா பிறந்த தேசமாம் அங்கே !!!!!
எம்மக்களிடம் இருந்த நேசம் தான் எங்கே ???????????

ஊரெல்லாம் வீதியாம்  , வீதியெல்லாம் சாதியாம்  
சாதிக்குள்ளே சாதியாம் , அச்சாதிக்குள்ளயே எல்லாமாம் 
தமிழுக்கு சங்கம் வைத்து வளர்த்தவன்  இன்று - சாதிக்கு 
சங்கம் வைத்து போற்றுகிறானே - சாதிகள் இல்லையடி பாப்பா என்று  சொன்ன பாரதியை எங்கள் சாதிக்காரன் என்கிறானே !!!!!

பெண்ணை போற்றி வளர்த்த திருநாடாம் அன்று 
காதலிக்கவில்லயென வெட்டிக்கொள்ளும் ஆணவநாடாம் இன்று 
இறந்தவளை பெண்ணென எவரும் பார்க்கவில்லயே - ஆனால் 
அவள் என்ன சாதி என வினவ மறக்கவில்லயே !!!!!

சாதியால் சத்துணவும் இல்லை , மதத்தால் மதியவுணவும் இல்லை 
இரண்டால் இரவுணவும் இல்லை, உழைப்பில்லையேல்  உயர்வில்லை ஏனோ பலரின் மனமோ இதை ஏற்பதில்லை !!!!!!!!!!

Tuesday, 30 August 2016





                                                செவாலியே விருது                



             கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் கமலகாசனுக்கு பிரான்சு அரசு செவாலியே விருது அறிவித்து கௌரவப்படுத்தியுள்ளது. இவ்விருது பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாகும். இவ்விருதை நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிறகு தமிழகத்தில் கமல்தான் பெறுகிறார் என்று பரவலாக பேசப்பட்டு பேசப்பட்டு வருகிறது. பல்வேறு துறை சார்ந்தவர்களிடமிருந்தும், அரசியல் வாதிகளிடமிருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அதே நேரத்தில் சிவாஜி கணேசனுக்கு பிறகு  கமல் தான் வாங்குகிறாரா என்றால் ஏற்றுக்கொள்ளமுடியாத செய்தியாகும்.


           புதுச்சேரியை சேர்ந்த மதன கல்யாணி என்பவர் இதற்கு முன்னதாகவே 2002 ஆம் ஆண்டு இவ்விருதை பெற்றுள்ளார். இவர் புதுச்சேரி பிரான்சு கல்லூரியில் 41 ஆண்டு காலம் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆவார். தமிழ் மொழியை தேர்வு செய்து படிக்கும் அயல்நாட்டவருக்கு தமிழ் மொழி, தமிழரின் கலாச்சாரம், பண்பாடு , பழக்கவழக்கங்களை கற்பித்து வந்துள்ளார். இவர் பிரான்சு மொழியில் முதுகலை பட்டமும், தமிழ் மொழியில் புலவர் பட்டமும் பெற்றவர். அதுமட்டுமல்லாது பல நூல்களையும் இயற்றியுள்ளார், சில தமிழ் நூல்கள் மற்றும் கலைகளை பற்றி பிரான்சு மொழியில் மொழிபெயர்த்துள்ளார். சிறந்த இலக்கியவாதியான இவருக்கு பிரான்சு அரசு தாமாகவே முன்வந்து செவாலியே விருதை விட உயர்ந்த விருதான ஒபிசியே என்ற விருதையும் வழங்கி கௌரவித்துள்ளது. இவ்விருதை பெற்ற முதல் இந்திய பெண்மணி மதன கல்யாணி என்பது குறிப்பிடத்தக்கது.


           தமிழகத்தை சேர்ந்த alex என்பவர் 2010 ஆம் ஆண்டு செவாலியே விருதை பெற்றுள்ளார். இவர் கரகாட்டம் , சிலம்பம் , மயிலாட்டம் , மல்யுத்தம் மற்றும் மேஜிக் கலைகளிலும் கைதேர்ந்தவர் ஆவார்.மேலும் சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.


           கலை , இலக்கியம், ஆழ்ந்த அரசியல் சிந்தனை, பகுத்தறிவு  மற்றும் புதிய தொழில்நுட்பத்தை தமிழ் திரையுலகத்திற்க்கு அறியமுகப்படுத்திய கமல் என்ற கலைஞன் செவாலியே விருதுக்கு தகுதியானவர் தான் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தில்லை. ஆனால் திரையுலகில் நடக்கின்ற விழாக்களோ , தேர்தலோ , விருதுகளோ ஏன் மிகைப்படுத்தப்பட்டு , மற்றவைகளெல்லாம் மழுங்கடிக்கப்படுகிறது.சட்டப்பேரவை தேர்தலின் முக்கியத்துவத்தை விட  நடிகர் சங்க தேர்தலை நோக்கி மக்களின் எண்ணம் திரும்புகிறது, சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான மக்களின் பார்வையை கபாலி படம் திசை திருப்புகிறது, இந்த அளவுக்கு தமிழ் மக்கள் நடிகர், நடிகைகளின் மீது ஆதித பாசம், அவர்கள் பேசும் வசனங்களின் மீது அளவுகடந்த நம்பிக்கை கொண்டமையால் என்னவோ , இன்று எம்மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ஐந்து முதலமைச்சர்களை திரைதுறையிலிருந்து மட்டும் நாம் தேர்ந்தெடுத்துள்ளோம்.

          தமிழகத்தில் காமராஜர் , கக்கன் , ஜீவானந்தம் என உன்னத அரசியலுக்கு உதாரணமாக இருந்த தலைவர்களின் வரிசையில் தான் இன்று குஷ்பூ , நக்மா , நமீதா போன்றோர்கள் வந்துள்ளார்கள் என்றால் தமிழர்களின் புதிய அரசியல் சிந்தனையும், பரந்துபட்ட புத்திசாலித்தனமும் தான் காரணம்.


                   " படித்த படிப்பெல்லாம் பரணியை சூழ 
                     நடித்த   நடிப்பெல்லாம் நாட்டை ஆள 
                     விசுவாசமேற்று வீழ்ந்ததாம் காலில் சில 
                     வந்து சேர்ந்ததாம் பதவிகள் பல....!!!!! "
                                                                    - தமிழ்நாடு 
                                                                          







Wednesday, 17 August 2016


                                

         இல்லாமலில்லை


சூத்திரமில்லா கணக்கில்லை
      தோல்வியில்லா வெற்றியில்லை
 கனவில்லா இலட்சியமில்லை
       சாதனையில்லா சரித்திரமில்லை 

  உனக்கெவரும் உட்சமில்லை
 முயன்றால் முடியாததில்லை
      நேர்மைக்கிங்கு பரிச்சயமில்லை 
  இங்கெதுவும் நிச்சயமில்லை 

  விவசாயில்லா உணவில்லை
 பாகுபாடில்லா மனிதரில்லை 
 வஞ்சமில்லா நெஞ்சமில்லை
            லஞ்சமில்லா அரசியலில்லை.....!!!!!!
 

Sunday, 14 August 2016

         சுதந்திரம் சுதந்திரம்     


1947 ஆகஸ்ட் பதினைந்து , அந்நியர் வெளியேற்றம் 
2016 ஆகஸ்ட் பதினைந்து , அந்நார்களின் கையே ஏற்றம் 

பாரம்பரியம் , கலாச்சாரம் மறைகிறதே 
கோக்கும் , பெப்சியும் முதலீடாய் நுழைகிறதே 

மக்களுக்கான சட்டமன்றமாம், சுயநலத்துக்காக வெளிநடப்பு 
என் நாட்டின் தலைப்பகுதியில் என்றுமே பதபதைப்பு 

சியாச்சின் உச்சியிலே எவருக்கும் உறக்கமில்லை 
அடித்தட்டில், அரசியலால் எவ்வித தாக்கமுமில்லை 

அடிமை தளத்திலிருந்து மீளப் போராட்டம் அன்று 
அடிப்படை வசதி கூட இல்லா திண்டாட்டம் இன்று 

விவசாயின் தற்கொகொலையோ லட்ச எண்ணிக்கை  - தற்போதைய
அரசியல் சித்தாந்தம் மாறுமென இன்றும் நம்பிக்கை 

அடடா! அடடா ! வளர்ச்சி ! வளர்ச்சி ! வளர்ச்சி !!!!
வந்ததே எழுபதமாண்டு சுதந்திரதின நிகழ்ச்சி ! நிகழ்ச்சி!!!
சாதி , மத , இன , மொழி வேறுபாடு கலைந்து 
சமத்துவம் , சமதர்மம் தளைத்தோங்க 
மகிழ்ச்சி ! மகிழ்ச்சி ! மகிழ்ச்சி !!!!!!!!


                                                                                                                   

Monday, 8 August 2016

           இரட்டை வேடங்கள் 

               

             1) நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன்தான் உலக பொருளாதாரம் மந்தமான நிலையிலும் இந்தியாவின் பொருளாதாரம் GDP 7.6 ஆக உயர்ந்ததுள்ளது. அதுமட்டுமல்லாது அந்நிய முதலீடு 53% இந்தியாவில் உயர்ந்துள்ளது என நிதி அமைச்சர் பெருமையடித்துக்கொள்ள அதையே நமது பாரத பிரதமரும் வழிமொழிந்தார் அதோடு மட்டுமல்லாது எங்கள் ஆட்சியின் ஈராண்டு ஆட்சியின் சாதனை என்று பெரிய விழாவையே எடுத்துவிட்டனர். 2014 நாடாளுமன்ற போட்டியின்போது மோடி அவர்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் உள்ள அனைத்து கருப்புபணத்தயும் மீட்டு ஒவ்வொரு இந்தியனின் வங்கியிலும் 15 லட்சம் போடப்படும் என்றார் அனால் இன்று எங்கள் ஆட்சியில் தான் அந்நிய முதலீடு அதிகமாக ஈர்க்கப்படுகிறது என்கிறார்.இந்தியாவில் பல முக்கிய துறைகளில் பாதுகாப்பு துறை உட்பட 100 % அந்நிய முதலீடு அனுமதிக்கபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  ஒருவேளை வெளிநாட்டில் உள்ள கறுப்புப்பணம் எல்லாம் இவ்வாறாக தான் மீட்கின்றனரோ என எண்ண வைக்கிறது.



              2)வழக்கம்போல் இந்த அரசாங்கத்தின் முகத்திரையை மீண்டும் ஒருமுறை கிழித்துள்ளது தணிக்கை துறை(CAG). கடந்த ஆண்டு பிரதமர் மோடி அவர்கள் செங்கோட்டையில் உரையாற்றும்போது மக்களின் வரிப்பணம் 15000 கோடி வரிப்பணம்  திருடப்பட்டுவந்தது அதை நங்கள் ஆதார், வங்கி கணக்கு மூலம் தடுத்து நிறுத்தியுள்ளோம்.  இதுமட்டுமல்லாது பல வசதி படைத்தவர்கள் மானியத்தை விட்டுக்கொடுத்ததன் மூலம்(give itup ) 2014-2015 மற்றும் 2015-2016 நிதியாண்டில் 22,000 கோடி ரூபாயை அரசு மிச்சப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். ஆனால் அப்படி விட்டுக்கொடுத்ததன் மூலம் 2000 முதல் 3000 கோடி வரை மட்டுமே மிச்சமாகியுள்ளது என்றும் மீதி தொகை இந்தியா இறக்குமதி செய்யும் எல்.பி.ஜி யின் விலை உலக சந்தையில் மிகவும் குறைந்ததே காரணம். ஆனால் மத்திய அரசும், பா.ஜா.க  வும் இந்த விசயத்தில் உண்மைக்கு மாறான செய்திகளை குறிவருகின்றார்கள் என தணிக்கை துறை மீண்டும் ஒருமுறை இவர்களின் குளறுபடிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.


              3) உத்திரகாண்டை சார்ந்த பா.ஜா.க  எம்.பி தருண்விஜய் திருவள்ளுவர் திருப்பயணம் தொடங்கி, இந்தியாவில் அனைவரின் வீட்டிலும் திருவள்ளுவர் படம் இருக்க வேண்டும், அனைத்து மாநிலங்களிலும் திருக்குறளை பாடமாக வைக்க வேண்டும் என்கிறார். வள்ளுவரின் புகழ் கொஞ்சம் அறிந்த தமிழகத்திலிருந்து தொடங்கியதிற்கு பதிலாக டெல்லி முதல் நாக்பூர் வரை சென்றுருந்தால் அவரது அமைப்பிற்கு மட்டுமல்லாது, நாடு முழுவதும்
ஐயனின் புகழை பரப்பிருக்கலாம். திருவள்ளுவரை அவர் ஒரு தலித், தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர் என கூறும் ஜாதி, மத வெறிபிடித்த அறிவுஜீவிகள் இருக்கையில் தமிழ்மீது பற்றுக்கொண்டு அவர் எடுத்த நடவடிக்கைகள் மட்டுமல்லாது அவரும் போற்றுதலுக்கு  உரியவர்தான். இது ஒருபுறம் இருக்க  இவர் சார்ந்திருக்கும் கட்சியே மத்திய அரசு நிறுவனங்களின் சமூக வலைத்தளங்களில் இந்தி,  பல்கலை கழகங்களில் இந்தி திணிப்பு, வடநாட்டு பல்கலை கழகங்களில் உள்ள தமிழ் ஆய்வு வகுப்புகளுக்கு தமிழின்மீதுள்ள காழ்புணர்ச்சியின் காரணமாக ஆசிரியர்களை சரியாக நியமிப்பதில்லை, சி.பி.எஸ்.இ பள்ளிகளில் சம்ஸ்கிருதம் வாரக் கொண்டாட்டம் என இந்தியை திணிக்க பாடுபடுகிறது.

            
           4) தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நாங்கள் ஒருபோதும் எதிரானவர்கள் அல்ல என சொல்லி தினமும் ஒரு தலித் மக்களின் வீட்டில், மத்தியில் ஆளும் கட்சியின் தேசிய தலைவரும் , தமிழ்நாட்டின் மாநில தலைவரும் உணவுண்டு வரும் அதே வேலையில் தான் நாட்டின் பல இடங்களில் மாட்டுக்கறி வைத்துள்ளதாக கூறி தலித் சமூகத்தினரை காவல்துறையின் முன்னிலையில் அவர்களின் கைகுச்சியாலேயே தாக்கப்படுகின்றனர். மறுபுறம் இந்தியாதான் மாட்டுக்கறி ஏற்றுமதியில் உலகளவில் இரண்டாவது இடத்தில உள்ளது அதுவும் வரும் சில மாதங்களில் முதலிடத்தில் இருக்கும் பிரேசிலை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என ஒரு ஆய்வு கூறுகிறது. இந்தியாவில் யாரும் மாட்டை கொன்று கறியை  சாப்பிட்டுவிடக்கூடாது அது இந்துமதத்திற்கு எதிரானது மட்டுமல்லாது அரசியலமைப்பு சட்டத்திற்கும் எதிரானது. அனால் நாங்கள் மாட்டை கொன்று வெளிநாடுகளுக்கு மட்டும்  ஏற்றுமதி செய்வோம். அதில் தெய்வக்குத்தம் ஒன்றும் வந்துவிடாது இந்தியாவில் சாப்பிட்டால் மட்டும்தான் தெய்வக்குத்தம்.


            5) இவையெல்லாம் ஒருபுறம் இருக்க தமிழ்நாட்டு அரசியலை எட்டிப்பார்த்தால் கொஞ்சம் வியப்பாகதான் இருக்கிறது. கேக்கிறவன் கேனயனாக இருந்தால் கேப்பையில் நெய் வடியுமாம் என்பது போல தமிழக சட்டசபையில் அ.தி.மு.க வை சார்ந்த ஒரு எம்.எல்.ஏ அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் ஒரு பெண் அதிபர் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவதுற்கு எங்கள் புரட்சித்தலைவி அம்மா தான் காரணம் என அனைவரையும் மெய் சிலிர்க்கவைத்துவிட்டார். அதுசரி அடுத்த அமைச்சர்கள் பட்டியலில் இடம்பிடித்திருப்பர்.


"அரசியல் எனும் ஆழ்கடலில் தரைதட்டி நிற்கும் கப்பலாய்,
அறியாமை எனும் நீரினால் சூழப்பட்டு சூழ்நிலை கைதிகளாகிவிட்டோம் "

Thursday, 14 July 2016

                         மேன்மக்கள் மேன்மக்களே

             
                      மத்திய, மாநில அரசுகள் மற்றும் அரசின் நிதியுதவி பெரும் சில அமைப்புகளின் வரவு , செலவு கணக்குகளை சரிபார்க்கும் அரசின் ஒரு அங்கம் தான் தணிக்கை துறை. அதாவது CAG ( comptroller and auditor of general ) கிட்டத்தட்ட 58000 ஊழியர்கள் இத்துறையில் பணிபுரிகின்றனர். காமன்வெல்த், 2 ஜி , நிலக்கரி சுரங்க ஏன் நம் தமிழ்நாட்டில் புதிதாக கட்டப்பட்ட தலைமைச்செயலகம் ஊழல் வரை நாட்டிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது இத்துறைதான்.   
 
                  இத்துறையின் தலைமை அதிகாரியாய் இருக்கும் சசிகாந்த் சர்மா குறிப்பிட்டதை மேற்கோள்காட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த சீதாராம் யெச்சூரி கடந்த வாரம் நமது அகில உலக புகழ் பாரத பிரதமருக்கு ஒரு கடிதத்தை எழுதினார்.  அதில் சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை பட்டியலிட்டார்.
  •  அதானி குழுமம் - 96031 கோடி 
  •  எஸ்ஸார் குழுமம் -1.01 ட்ரில்லியன்
  •  ஜி.எம்.ஆர் -47,976 கோடி 
  •  ஜி.வி.கே  - 33,933 கோடி 
  •  ஜே.பி குழுமம் - 75,163 கோடி
  •  ஜே.எஸ்.டபிள்யூ - 58,171 கோடி
  •  லான்கோ குழுமம் - 47,102 கோடி 
  •  ரிலைன்ஸ் குழுமம் - 1.25 ட்ரில்லியன் 
  •  வேதாந்த குழுமம் - 1.03 ட்ரில்லியன்
  •  விடியோகான் - 45,405 கோடி 
 நம் நாட்டில் விவசாயிகளின் பயிற்கடனாக வழங்கப்பட்ட கடனும், அதானி என்ற தனி ஒருவனுக்கு வழங்கப்பட கடனும் ஒன்றுதான் என ஒருமுறை நாடாளுமன்றத்தில் பேச்சு எழுந்தது,  அந்த பேச்சு பேச்சாகவே போனது. நம் நாட்டில் ஆண்டவனை பற்றிகோட எதிர்க்கருத்து வைக்கலாம், ஆனாலும் அதானி போன்றோரை பற்றி எந்த கருத்தும் வைத்த விடமுடியாது. ஆக மொத்தம் மேற்குறிப்பிட்ட சில நிறுவங்கள் மட்டும் 7 லட்சம் கோடியை கடனாக பெற்றுள்ளது.  இதில் 5 லட்சம் கோடியை வங்கிகள் வாராக்கடன் பட்டியலில் இணைத்துவிட்டது. அதாவது காந்தி கணக்கில் சேர்க்கப்பட்டுவிட்டது.  இந்த பணம் அனைத்தும் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டது அதை திரும்பப்பெறுதல் என்பது சாத்தியமில்லை என CAG தலைமை அதிகாரி கூறியிருக்கிறார்.

           இதுபோன்ற தரகு முதலாளிகளுக்காகத்தான்  ஆண்டு தோறும் பட்ஜெட்டோ என எண்ணும் வகையில் கடந்த பட்ஜட்டில் மட்டும் வருமான வரி, சுங்க வரி, காலால் வரி என்ற வகையில் மொத்தம் 5,48,451 கோடி ரூபாய் வரிச்சலுகை என்ற பெயரில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் விவசாயம் மற்றும் விவசாய நலனுக்காக 35,984 கோடி மட்டும் ஒதுக்கிவிட்டு நாங்கள் ஏழை, எளியவர்களுக்கான ஆட்சி என்று நம்மையே முட்டாளாக்குவர்.

  பங்குச்சந்தையின் குறியீட்டுக்குள் அடைக்கப்பட்ட நமது பொருளாதாரம் தற்போது வலுவாக இருக்கிறது என சொல்லிக்கொண்டு, தன்னை காட்டிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய, மனித வளம் குறைந்த, ஏழை நாடுகளான மொசாம்பிக் போன்ற ஆப்ரிக்கா நாடுகளிடம் பருப்புக்காக பிச்சையெடுக்கிறோம்.  என்ன செய்வது பங்குச்சந்தையின் குறியீட்டு எண்ணுக்கு கொடுக்கும் முக்கியத்துவம், என் நாட்டு விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கைக்கு கொடுப்பதில்லை. தனியார் மயம் , தாராள மயம் என திணிக்கப்பட்ட கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் 3.2 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இன்னொருபுறம் இந்தியாவில் 111 பெரும் பணக்காரர்களின் சொத்துமதிப்பு வருடத்திற்கு 25% அதிகரிக்கிறதாம்.

                          "செத்தாலும் மேன்மக்கள் மேன்மக்களே 
                            பட்டாலும் எம்மக்கள் எம்மக்களே "

மறப்பது நமது குணம், அதுவே அவர்களின் மூலதனம்.
        
                                                 
                                                                                                               
                                              

Wednesday, 29 June 2016

                                      முதலாளித்துவத்தின் அடுத்த அடி


                    பிழைப்பு வாதிகளின் கடைசி புகலிடம் அரசியல் என்பார் பெரியார் அதுபோல தான் ஏழை, எளிய மாணவர்களின் வளர்ச்சிக்கு கடைசி தூணாக இருப்பது கல்வியும், அதற்காக வழங்கப்படுகிற கடனும் ஆகும்.


          தற்போது அதிலயும் கைவைத்து இந்த முதலாளித்துவம் , பாரத ஸ்டேட் வங்கி ( SBI) மாணவர்கள் வாங்கிய கல்வி கடனை வசூலிக்க தன்னுடைய பகுதிக்கு மேற்பட்ட பங்குகளை RELIANCE  க்கு விற்றுள்ளது. இனி அந்நிறுவனம் சொல்லும் காலக்கெடுக்குள் வாங்கிய கடனை தலையை அடமானம் வைத்தாவது செலுத்தியாக வேண்டும் மாணவர்கள். இல்லையேல் அடுத்த நடவடிக்கை அவர்களுடைய விருப்பப்படியும் ஆகலாம்.

                  நம் நாட்டில் கல்வி  மேம்பாட்டிற்காக வசூலிக்கப்படுகிற வரி சரியான முறையில் ஒதுக்கப்படுகிறதா, லலித் மோடி, மல்லையா, தற்போது 6800 கோடியுடன் நாட்டைவிட்டு ஓடிய ஜதின் மேத்தா, நோக்கியா நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட கடன் என்னவாயிற்று, பெரும்  முத(லை) லாளிகளின் வாராக்கடன் மட்டும் 6 லட்சம் கோடியை தாண்டுகிறதே, அவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் பல லட்சம் கோடி வரிச்சலுகை என்ற பெயரில் தள்ளுபடி செய்யப்படுகிறதே, இவையெல்லாம் அரசுக்கோ, வங்கிகளின் கண்ணுக்கோ தெரியாது, வரியை தன்னால் கட்ட முடிந்தும் , கட்டாத பல கார்ப்பரேட் நிறுவனங்களின் பெயரை வெளியிட வேண்டும்  என்று சொன்ன ரிசெர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனை தேசப்பற்று இல்லாதவன் என்றுதான் சொல்ல தெரியும்.

      ஐம்பதாயிரம், ஒரு  லட்சம் கடன் கேட்டு சென்றால் இருக்கின்ற அனைத்தையும் அடமானமாக வாங்கிக்கொண்டு கடன் வழங்கும் இதே வங்கிதான், ஜதின் மேத்தா போன்றோருக்கு உறுதிமொழியின் அடிப்படையில் கடன் வழங்குகிறது. அது என்ன உறுதிமொழி என்று தெரியவில்லை.

               " இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்து
                வகுத்தலும்  வல்ல தரசு "

             
       என்கிறது மறை.  ஆனால் நடப்பது என்னவோ எல்லாம் எதிர்மறை. உடையோருக்கு உறுதுணையாகவும், சாமானியனுக்கு சவுக்காகவும் இருக்கிறது அரசு.  சட்டமும், அரசும் வளைந்து கொடுக்கும் வரை வளைப்பவர்கள்  வளரத்தான் செய்வார்கள் , உழைப்பவரை உலையில் போடதான் பார்ப்பார்கள்.