1959 ல் கியூபாவில் அதிகாரத்தை எடுத்து
அடிமை தளத்தை விளக்கினாய்
கம்யூனிசத்தை கையில் எடுத்து
பொதுவுடைமையை போதித்தாய்
ஏகாதிபத்தியத்தின் சொத்துகளையெல்லாம்
அரசுடைமை ஆக்கினாய் - தான்
ஏற்று கொண்ட கொள்கையெல்லாம்
ஒன்றொன்றாய் செய்து காட்டினாய்
சுயமரியாதையும் , சமதர்மத்தையும்
மக்களின் மத்தியில் விதைத்தாய் - நீ
638 முறை அமெரிக்காவின் கொலை
வெறியிலிருந்து உயிர் பிழைத்தாய்
சே குவரே துணைகொண்டு நாட்டை
செல்வச்செழிப்பாய் மாற்றினாய் - உன்
தாடியையும், சுருட்டையும் கொண்டே
உலக மக்களையெல்லாம் வசீகரித்தாய்
புரட்சியாளனாய் உலகத்திற்கு தெரிகிறாய்
இன்று இயற்கையின் விருப்பத்தினால்
மண்ணுலகை விட்டே பிரிகிறாய்....!!!!!!!!!
"தடம் பார்த்து நடப்பவன் மனிதன்
தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் "
- பிடல் காஸ்ட்ரோ

No comments:
Post a Comment