சாதிக்குள்ளே சாதி
சுயமரியாதை இயக்கம் கண்ட மண்ணாம் - தமிழகம்
பகுத்தறிவு பதிந்த பகலவன் பிறந்த நாடாம் - தமிழ்நாடு
இன்று சாதிச்சண்டை போடுவதிலே இரண்டாமிடமாம் - இந்தியாவிலேயே பெரியார் , அண்ணா பிறந்த தேசமாம் அங்கே !!!!!
எம்மக்களிடம் இருந்த நேசம் தான் எங்கே ???????????
ஊரெல்லாம் வீதியாம் , வீதியெல்லாம் சாதியாம்
சாதிக்குள்ளே சாதியாம் , அச்சாதிக்குள்ளயே எல்லாமாம்
தமிழுக்கு சங்கம் வைத்து வளர்த்தவன் இன்று - சாதிக்கு
சங்கம் வைத்து போற்றுகிறானே - சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொன்ன பாரதியை எங்கள் சாதிக்காரன் என்கிறானே !!!!!
பெண்ணை போற்றி வளர்த்த திருநாடாம் அன்று
காதலிக்கவில்லயென வெட்டிக்கொள்ளும் ஆணவநாடாம் இன்று
இறந்தவளை பெண்ணென எவரும் பார்க்கவில்லயே - ஆனால்
அவள் என்ன சாதி என வினவ மறக்கவில்லயே !!!!!
சாதியால் சத்துணவும் இல்லை , மதத்தால் மதியவுணவும் இல்லை
இரண்டால் இரவுணவும் இல்லை, உழைப்பில்லையேல் உயர்வில்லை ஏனோ பலரின் மனமோ இதை ஏற்பதில்லை !!!!!!!!!!
No comments:
Post a Comment