முதலாளித்துவத்தின் அடுத்த அடி
பிழைப்பு வாதிகளின் கடைசி புகலிடம் அரசியல் என்பார் பெரியார் அதுபோல தான் ஏழை, எளிய மாணவர்களின் வளர்ச்சிக்கு கடைசி தூணாக இருப்பது கல்வியும், அதற்காக வழங்கப்படுகிற கடனும் ஆகும்.
தற்போது அதிலயும் கைவைத்து இந்த முதலாளித்துவம் , பாரத ஸ்டேட் வங்கி ( SBI) மாணவர்கள் வாங்கிய கல்வி கடனை வசூலிக்க தன்னுடைய பகுதிக்கு மேற்பட்ட பங்குகளை RELIANCE க்கு விற்றுள்ளது. இனி அந்நிறுவனம் சொல்லும் காலக்கெடுக்குள் வாங்கிய கடனை தலையை அடமானம் வைத்தாவது செலுத்தியாக வேண்டும் மாணவர்கள். இல்லையேல் அடுத்த நடவடிக்கை அவர்களுடைய விருப்பப்படியும் ஆகலாம்.
நம் நாட்டில் கல்வி மேம்பாட்டிற்காக வசூலிக்கப்படுகிற வரி சரியான முறையில் ஒதுக்கப்படுகிறதா, லலித் மோடி, மல்லையா, தற்போது 6800 கோடியுடன் நாட்டைவிட்டு ஓடிய ஜதின் மேத்தா, நோக்கியா நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட கடன் என்னவாயிற்று, பெரும் முத(லை) லாளிகளின் வாராக்கடன் மட்டும் 6 லட்சம் கோடியை தாண்டுகிறதே, அவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் பல லட்சம் கோடி வரிச்சலுகை என்ற பெயரில் தள்ளுபடி செய்யப்படுகிறதே, இவையெல்லாம் அரசுக்கோ, வங்கிகளின் கண்ணுக்கோ தெரியாது, வரியை தன்னால் கட்ட முடிந்தும் , கட்டாத பல கார்ப்பரேட் நிறுவனங்களின் பெயரை வெளியிட வேண்டும் என்று சொன்ன ரிசெர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனை தேசப்பற்று இல்லாதவன் என்றுதான் சொல்ல தெரியும்.
ஐம்பதாயிரம், ஒரு லட்சம் கடன் கேட்டு சென்றால் இருக்கின்ற அனைத்தையும் அடமானமாக வாங்கிக்கொண்டு கடன் வழங்கும் இதே வங்கிதான், ஜதின் மேத்தா போன்றோருக்கு உறுதிமொழியின் அடிப்படையில் கடன் வழங்குகிறது. அது என்ன உறுதிமொழி என்று தெரியவில்லை.
வகுத்தலும் வல்ல தரசு "
என்கிறது மறை. ஆனால் நடப்பது என்னவோ எல்லாம் எதிர்மறை. உடையோருக்கு உறுதுணையாகவும், சாமானியனுக்கு சவுக்காகவும் இருக்கிறது அரசு. சட்டமும், அரசும் வளைந்து கொடுக்கும் வரை வளைப்பவர்கள் வளரத்தான் செய்வார்கள் , உழைப்பவரை உலையில் போடதான் பார்ப்பார்கள்.
No comments:
Post a Comment