Wednesday, 12 April 2017

                                  விவசாயின் அவலம் 




அகிலத்தில் மூத்தக்குடி டில்லியிலே
அரைநிர்வாணமாய் நிற்குது !!
அடிமைகளோ ஆர் கே நகர்ல
தெருத்தெருவுக்கு பொறுக்குது !!

ஏர் உழுத விவசாயில்லாம்
ஏழ்நிலையிலே இருக்கிறான்
எக்னாமிக்ஸ் உயருதுன்னு
ஏடெல்லாம் எழுதுறான் !!

மேக்இன் இந்தியாவில் மேல்தட்டு
நிறுவன கடனெல்லாம் தள்ளுபடி !!
மன் கி பாத்ல கூட மல்லையாவ
பற்றி பேசமாட்டாரு எங்க ஐயா மோடி !!

தினந்தோறும் 40 கோடி மக்கள்
இரவுணவு இல்லாமல் உறக்கம் !!
திங்க சோறு இல்லாட்டியும் நாடெங்கும்
டிஜிட்டல் இந்தியாவை பற்றி முழக்கம் !!

அணு ஆயுதங்களை வாங்கிக்குவித்து
அண்டைநாட்டை பயமுறுத்தி என்னபயன்?
அன்றாட சோத்துக்கு வழியில்லாமல்
வளர்ச்சிப்பற்றி கூவுவதால்தானே முரண்

விவசாயி மன்றாடி கேட்டும் மத்தியமும்
மாநிலமும் செவிச்சாய்க்கவில்லையே !!
விவசாயமெல்லாம் புளுத்து போனபின்பு
புதிய இந்தியா பிறந்து பயனில்லையே !!


அதானி என்ற தனியொருவனுக்கும், இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கும் வழங்கப்பட்ட கடன் ஒரே அளவுதான் ஏறத்தாழ 73000 கோடி..




No comments:

Post a Comment