Friday, 24 March 2017


                                             துப்பரவு  துயரம்  



                       விசவாயு தாக்கி மூன்று துப்புரவு தொழிலாளர்கள் மரணம் ...!!                                       





ஏற்றத்தாழ்வுகளை ஏற்றுநிற்கும் 
சமுதாயம் இருக்குமாயின் 
ஏவுகணையை விண்ணில் ஏவி 
இறுமாப்பு கொண்டென்ன பயன் ??

அறிவியல் யுகம் நடக்கும்போதும்  
அடிமை எண்ணம் மாறவில்லையே !!
அறிவியலறிஞர் பலபேர் இருந்தும் 
கழிவுகளை அகற்ற கருவியில்லையே !!

உச்சநீதிமன்றம் உரக்கச்சொல்லியும் 
ஆளும்வர்க்கத்திற்கு உரைக்கவில்லையே !!
மனிதக்கழிவுகளை மனிதனே அள்ளும் 
வழக்கம் இன்னும் ஒழியவில்லையே !!

பெரியார் அம்பேத்கர் பிறந்த இந்நாட்டில் 
இன்னமும் இப்படியொரு இழிநிலை  !!
என்று மாறுமோ இவர்களின் நிலை ??

No comments:

Post a Comment