இரட்டை வேடங்கள்
1) நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன்தான் உலக பொருளாதாரம் மந்தமான நிலையிலும் இந்தியாவின் பொருளாதாரம் GDP 7.6 ஆக உயர்ந்ததுள்ளது. அதுமட்டுமல்லாது அந்நிய முதலீடு 53% இந்தியாவில் உயர்ந்துள்ளது என நிதி அமைச்சர் பெருமையடித்துக்கொள்ள அதையே நமது பாரத பிரதமரும் வழிமொழிந்தார் அதோடு மட்டுமல்லாது எங்கள் ஆட்சியின் ஈராண்டு ஆட்சியின் சாதனை என்று பெரிய விழாவையே எடுத்துவிட்டனர். 2014 நாடாளுமன்ற போட்டியின்போது மோடி அவர்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் உள்ள அனைத்து கருப்புபணத்தயும் மீட்டு ஒவ்வொரு இந்தியனின் வங்கியிலும் 15 லட்சம் போடப்படும் என்றார் அனால் இன்று எங்கள் ஆட்சியில் தான் அந்நிய முதலீடு அதிகமாக ஈர்க்கப்படுகிறது என்கிறார்.இந்தியாவில் பல முக்கிய துறைகளில் பாதுகாப்பு துறை உட்பட 100 % அந்நிய முதலீடு அனுமதிக்கபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை வெளிநாட்டில் உள்ள கறுப்புப்பணம் எல்லாம் இவ்வாறாக தான் மீட்கின்றனரோ என எண்ண வைக்கிறது.
2)வழக்கம்போல் இந்த அரசாங்கத்தின் முகத்திரையை மீண்டும் ஒருமுறை கிழித்துள்ளது தணிக்கை துறை(CAG). கடந்த ஆண்டு பிரதமர் மோடி அவர்கள் செங்கோட்டையில் உரையாற்றும்போது மக்களின் வரிப்பணம் 15000 கோடி வரிப்பணம் திருடப்பட்டுவந்தது அதை நங்கள் ஆதார், வங்கி கணக்கு மூலம் தடுத்து நிறுத்தியுள்ளோம். இதுமட்டுமல்லாது பல வசதி படைத்தவர்கள் மானியத்தை விட்டுக்கொடுத்ததன் மூலம்(give itup ) 2014-2015 மற்றும் 2015-2016 நிதியாண்டில் 22,000 கோடி ரூபாயை அரசு மிச்சப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். ஆனால் அப்படி விட்டுக்கொடுத்ததன் மூலம் 2000 முதல் 3000 கோடி வரை மட்டுமே மிச்சமாகியுள்ளது என்றும் மீதி தொகை இந்தியா இறக்குமதி செய்யும் எல்.பி.ஜி யின் விலை உலக சந்தையில் மிகவும் குறைந்ததே காரணம். ஆனால் மத்திய அரசும், பா.ஜா.க வும் இந்த விசயத்தில் உண்மைக்கு மாறான செய்திகளை குறிவருகின்றார்கள் என தணிக்கை துறை மீண்டும் ஒருமுறை இவர்களின் குளறுபடிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
3) உத்திரகாண்டை சார்ந்த பா.ஜா.க எம்.பி தருண்விஜய் திருவள்ளுவர் திருப்பயணம் தொடங்கி, இந்தியாவில் அனைவரின் வீட்டிலும் திருவள்ளுவர் படம் இருக்க வேண்டும், அனைத்து மாநிலங்களிலும் திருக்குறளை பாடமாக வைக்க வேண்டும் என்கிறார். வள்ளுவரின் புகழ் கொஞ்சம் அறிந்த தமிழகத்திலிருந்து தொடங்கியதிற்கு பதிலாக டெல்லி முதல் நாக்பூர் வரை சென்றுருந்தால் அவரது அமைப்பிற்கு மட்டுமல்லாது, நாடு முழுவதும்
ஐயனின் புகழை பரப்பிருக்கலாம். திருவள்ளுவரை அவர் ஒரு தலித், தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர் என கூறும் ஜாதி, மத வெறிபிடித்த அறிவுஜீவிகள் இருக்கையில் தமிழ்மீது பற்றுக்கொண்டு அவர் எடுத்த நடவடிக்கைகள் மட்டுமல்லாது அவரும் போற்றுதலுக்கு உரியவர்தான். இது ஒருபுறம் இருக்க இவர் சார்ந்திருக்கும் கட்சியே மத்திய அரசு நிறுவனங்களின் சமூக வலைத்தளங்களில் இந்தி, பல்கலை கழகங்களில் இந்தி திணிப்பு, வடநாட்டு பல்கலை கழகங்களில் உள்ள தமிழ் ஆய்வு வகுப்புகளுக்கு தமிழின்மீதுள்ள காழ்புணர்ச்சியின் காரணமாக ஆசிரியர்களை சரியாக நியமிப்பதில்லை, சி.பி.எஸ்.இ பள்ளிகளில் சம்ஸ்கிருதம் வாரக் கொண்டாட்டம் என இந்தியை திணிக்க பாடுபடுகிறது.
4) தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நாங்கள் ஒருபோதும் எதிரானவர்கள் அல்ல என சொல்லி தினமும் ஒரு தலித் மக்களின் வீட்டில், மத்தியில் ஆளும் கட்சியின் தேசிய தலைவரும் , தமிழ்நாட்டின் மாநில தலைவரும் உணவுண்டு வரும் அதே வேலையில் தான் நாட்டின் பல இடங்களில் மாட்டுக்கறி வைத்துள்ளதாக கூறி தலித் சமூகத்தினரை காவல்துறையின் முன்னிலையில் அவர்களின் கைகுச்சியாலேயே தாக்கப்படுகின்றனர். மறுபுறம் இந்தியாதான் மாட்டுக்கறி ஏற்றுமதியில் உலகளவில் இரண்டாவது இடத்தில உள்ளது அதுவும் வரும் சில மாதங்களில் முதலிடத்தில் இருக்கும் பிரேசிலை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என ஒரு ஆய்வு கூறுகிறது. இந்தியாவில் யாரும் மாட்டை கொன்று கறியை சாப்பிட்டுவிடக்கூடாது அது இந்துமதத்திற்கு எதிரானது மட்டுமல்லாது அரசியலமைப்பு சட்டத்திற்கும் எதிரானது. அனால் நாங்கள் மாட்டை கொன்று வெளிநாடுகளுக்கு மட்டும் ஏற்றுமதி செய்வோம். அதில் தெய்வக்குத்தம் ஒன்றும் வந்துவிடாது இந்தியாவில் சாப்பிட்டால் மட்டும்தான் தெய்வக்குத்தம்.
5) இவையெல்லாம் ஒருபுறம் இருக்க தமிழ்நாட்டு அரசியலை எட்டிப்பார்த்தால் கொஞ்சம் வியப்பாகதான் இருக்கிறது. கேக்கிறவன் கேனயனாக இருந்தால் கேப்பையில் நெய் வடியுமாம் என்பது போல தமிழக சட்டசபையில் அ.தி.மு.க வை சார்ந்த ஒரு எம்.எல்.ஏ அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் ஒரு பெண் அதிபர் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவதுற்கு எங்கள் புரட்சித்தலைவி அம்மா தான் காரணம் என அனைவரையும் மெய் சிலிர்க்கவைத்துவிட்டார். அதுசரி அடுத்த அமைச்சர்கள் பட்டியலில் இடம்பிடித்திருப்பர்."அரசியல் எனும் ஆழ்கடலில் தரைதட்டி நிற்கும் கப்பலாய்,
அறியாமை எனும் நீரினால் சூழப்பட்டு சூழ்நிலை கைதிகளாகிவிட்டோம் "
Super
ReplyDeleteVery informative
ReplyDelete